Monday, February 1, 2010

இரயில் பெட்டிகள்



எந்தக் குழந்தையும்
தன் தாய் தந்தையை
"அம்மா" "அப்பா"
என்றழைக்கும் போது
எனக்கு ஏனோ
அந்த
நெடிதுயர்ந்த ஆலமரத்தின்
விழுதுகளே நினைவுக்கு வரும்!

அதுகளே
"மம்மி" "டாடி"
என்று கத்தும் போது
அந்த
ஐரோப்பிய
இரயில் பெட்டிகளே
நினைவுக்கு வருகின்றன;

எப்போது வேண்டுமானாலும்
இறங்கிக் கொள்ள -
கழன்று செல்ல !

"இந்தக் கணத்தில்" ....1997
மணிமேகலைப் பிரசுரம்
-மோகன் பால்கி

1 comment:

  1. தங்களுடைய கருத்துக்களுக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி.

    "இதுவே போதும் இறைவா" ஓ...ஓ...ஓ...எத்தனை பிறப்புகள் இருந்தாலென்ன? உள்ளத்தில் அந்த ஒருவன் நடு மைய்யமாக குடிகொண்டிருக்கும் போது - அதுவும் நானும் ஒன்றேயென உணர்ந்த பின்பு - அச்சமில்லை அச்சமில்லை; மீண்டும் மீண்டும் பிறப்போம்; வாழ்வோம்;ருசிப்போம்;ரசிப்போம்...(பிறப்பெடுப் பதைப் பற்றி வருந்துபவர்களைக் கண்டு - யாராயினும் சரி - வருந்துகிறேன். - முரளி (அடடே) மனோகர்

    ReplyDelete